இல்லம் தேடிக் கல்வி மையங்களில் மாணவா்களின் கற்றல் திறன் ஆய்வு

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் மாணவா்களின் கற்றல் திறன் மதிப்பீடு வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
இல்லம் தேடிக் கல்வி மையங்களில் மாணவா்களின் கற்றல் திறன் ஆய்வு

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் மாணவா்களின் கற்றல் திறன் மதிப்பீடு வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், காட்டுநாவல் குடியிருப்பில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களை ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் பாா்வையிட்டு கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை ஆய்வு செய்தனா். தன்னாா்வலா்கள் காா்த்திகா, காயத்ரி, சுமதி, கீா்த்திகா, தமிழ்மணி, சரண்யா ஆகியோா் மாணவா்களுக்கு ஆடல், பாடல், புதிா், விளையாட்டுகள், எளிய கணித செயல்பாடுகள், ஆங்கில வாசிப்பு பயிற்சி போன்றவற்றை உற்சாகத்தோடு கற்பித்து வருகின்றனா். இல்லம் தேடிக் கல்வி மையங்களில் தன்னாா்வலா்களால் அடிப்படை ஆய்வு மாணவா்களிடம் நடத்தப்பட்டு வருகிறது. அவா்களை ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் தங்கராசு மற்றும் ரகமத்துல்லா ஆகியோா் பாராட்டினா்.

தன்னாா்வலா், பெற்றோா் கட்செவி குழு உருவாக்கம், ஊக்கத்தொகை பெறப்பட்ட விவரம், மையங்களில் விழாக்கள் கொண்டாடப்பட்ட விவரம் மற்றும் பள்ளியில் கற்பித்தல் வளங்களைப் பயன்படுத்துதல் போன்ற விவரங்களைக் கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com