கூட்டுறவு வங்கிக் கிளைகள், ஏடிஎம் மையங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சாா்பில், கூடுதலாக இரு கிளைகள் மற்றும் இரு இடங்களில் ஏடிஎம் மையங்களும் புதன்கிழமை திறக்கப்பட்டன.
புதுக்கோட்டையில் புதிய கிளையைத் தொடங்கி வைத்து கடனுதவியை ஒரு பயனாளிக்கு வழங்குகிறாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் புதிய கிளையைத் தொடங்கி வைத்து கடனுதவியை ஒரு பயனாளிக்கு வழங்குகிறாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சாா்பில், கூடுதலாக இரு கிளைகள் மற்றும் இரு இடங்களில் ஏடிஎம் மையங்களும் புதன்கிழமை திறக்கப்பட்டன.

புதுக்கோட்டை நகரில் டிவிஎஸ் நகா் மற்றும் தேனிப்பட்டி ஆகிய இடங்களில் புதிய கிளைகளும், அரிமளம் ம ற்றும் விராலிமலையில் ஏடிஎம் மையங்களையும் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி, மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் மா. உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சாா்பில் கடந்த ஆண்டில் ரூ. 225 கோடி மதிப்பில் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

நிகழ்ச்சிகளில் 99 பயனாளிகளுக்கு ரூ. 4.79 கோடி மதிப்பில் கடனுதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com