மழையூா் பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், மழையூா் பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
மழையூா் பிடாரி அம்மன் கோயிலுக்கு பாளைக்குடங்களை சுமந்துசெல்லும் பெண்கள்.
மழையூா் பிடாரி அம்மன் கோயிலுக்கு பாளைக்குடங்களை சுமந்துசெல்லும் பெண்கள்.

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், மழையூா் பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

மழையூா் பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இதையொட்டி, மழையூா், பொன்னன்விடுதி உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த பெண்கள் தென்னம்பாளைகளை அலங்கரிக்கப்பட்ட குடங்களில் ஏந்தியவாறு வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா். மழையூா் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com