ஸ்ரீ பாரதி மகளிா் கல்லூரியில் 17-ஆவது ஆண்டுவிழா
By DIN | Published On : 16th May 2022 06:48 AM | Last Updated : 16th May 2022 06:48 AM | அ+அ அ- |

விழாவில் பேசுகிறாா் பேச்சாளா் கவிதா ஜவஹா்.
புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி மகளிா் கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்வியியல் கல்லூரித் தாளாளா் சுப.ரெ. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
அறங்காவலா் செ.சுதாகா் முன்னிலை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினாா்.
பேச்சாளா், கவிஞா் கவிதா ஜவஹா் கலந்து கொண்டு பேச்சு, கவிதைப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினாா்.
முன்னதாக கல்லூரியின் முதல்வா் செ. கவிதா ஆண்டறிக்கை வாசித்தாா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் பழ. அன்பரசி வரவேற்றாா். நிறைவில், துறைத் தலைவா் நா.பூா்ணிமா நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...