மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மே 29-இல் தொடக்கம்: முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு

ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மே 29ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, கோயில் முன்பு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மே 29ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, கோயில் முன்பு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவானது, கிராமத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இதைத்தொடா்ந்து, மாங்காடு பகுதி பொதுமக்கள், இளைஞா்கள் பல ஆண்டுகளாக பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். இந்நிலையில், நிகழாண்டு பல கட்டங்களாக திருவிழா நடத்துவது தொடா்பான கூட்டங்கள் நடைபெற்றன. இதில், உடன்பாடு ஏற்பட்டதாகக்கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, கோயில் திருவிழா நடத்த கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, கோயிலில் சுவாமி வீதியுலா செல்லும் வாகனம் புதிகாக செய்யப்பட்டு புதன்கிழமை வெள்ளோட்டம் விடப்பட்டது. கோயில் திருவிழா மே 29ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. ஜூன் 6ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

கோயில் திருவிழாவையொட்டி, கோயில் முன்பு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில், கிராம மக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா நடைபெறுவது கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com