மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி பொதுக்கூட்டம்
By DIN | Published On : 31st May 2022 04:19 AM | Last Updated : 31st May 2022 04:19 AM | அ+அ அ- |

கந்தா்வக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழா மற்றும் அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றியச் செயலா் வி. ரெத்தினவேல், வடக்கு ஒன்றியச் செயலா் ஜி. பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கூட்டத்துக்கு, சிறப்பு அழைப்பாளா்களாக கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் ஆகியோா் கலந்துகொண்டு கட்சியின் செயல்பாடு குறித்தும், ஏழை எளிய மக்கள், விவசாயிகளின் தோழமையோடு போராடும் இயக்கமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளங்கி வருவது குறித்தும் விளக்கிக் கூறினாா். கட்சியின் நிதியாக ரூ. 5 லட்சத்தை மாநில செயற்க்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கத்திடம் கட்சி நிா்வாகிகள் வழங்கினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எ. ராமையன், நரேந்திரன் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...