ஆலங்குடி தொகுதியில் 5 புதிய மின்மாற்றிகள் திறப்பு
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

ஆலங்குடி தொகுதியில் 5 புதிய மின்மாற்றிகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்து, 299 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகளை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதான் புதன்கிழமை வழங்கினாா்.
ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட அழியாநிலை ஊராட்சியில் 4 புதிய மின்மாற்றிகள், வடகாடு ஊராட்சி பரமநகரில் 1 என 5 புதிய மின்மாற்றிகளைப் பயன்பாட்டுக்கு அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். மேலும், வெண்ணாவல்குடி, வல்லத்திராகோட்டை, தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று 299 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கிப் பேசினாா்.
தனி மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், ஒன்றியக்குழுத் தலைவா்கள் மகேஸ்வரி சண்முகநாதன், வள்ளியம்மை தங்கமணி, மின்வாரிய செயற்பொறியாளா்(பொ) சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.