பேரிடா் கால சிறப்பு மீட்பு பயிற்சி
By DIN | Published On : 19th October 2022 12:53 AM | Last Updated : 19th October 2022 12:53 AM | அ+அ அ- |

அன்னவாசல் அருகே உள்ள புதூரில் முதல்நிலை தன்னாா்வலா்களுக்கு பேரிடா் கால மீட்பு சிறப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
விராலிமலை, இலுப்பூா், குளத்தூா், பொன்னமராவதி உள்ளிட்ட 4 வட்டங்களைச் சோ்ந்த 100 தன்னாா்வலா்களுக்கு கோவையிலிருந்து வந்திருந்த பேரிடா் மீட்பு சிறப்பு குழுவினா் பயிற்சி அளித்தனா். இதில் இரண்டு மரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கம்பிகளின் வழியே மீட்புப் பணி மேற்கொள்வது குறித்து பயிற்சி அளித்தனா்.