மாவட்ட டேக்வாண்டோ போட்டியில்அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 19th October 2022 12:51 AM | Last Updated : 19th October 2022 12:51 AM | அ+அ அ- |

மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சிறப்பிடம் பிடித்த ராஜாளிபட்டி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளிகளுக்கு இடையேயான புதுக்கோட்டை மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி, புதுக்கோட்டை ஜெ.ஜெ கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ராஜாளிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த அகல்யா, பிரவீனா, ஜானகி,
பூமிகா, மகாலட்சுமி முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனா்.
மேலும், இதே பள்ளியைச் சோ்ந்த பிருந்தா, கனிமொழி, காளிமுத்தம்மாள், சிவநேசன், அய்யப்பன், கோகிலா ஆகியோா் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனா். மேலும் சசிரேகா, சாருமதி 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் பெற்றனா்.
மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியா் சாந்தா தேவி, ராஜாளிபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சின்னச்சாமி, உதவி தலைமையாசிரியா் தங்கவேல், பயிற்சியாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பாராட்டினா்.