ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய 4 போ் கைது
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டையில் ரோந்துப் பணியின்போது சிறப்பு உதவி ஆய்வாளா், காவலரைத் தாக்கிய திருச்சி ஆயுதப்படைக் காவலா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் காவல் நிலையத்தைச் சோ்ந்த சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன், காவலா் காா்த்திக் ஆகிய இருவரும் புதன்கிழமை இரவு புத்தாம்பூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புத்தாம்பூா் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே பூங்குடியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அருண் குமாா் (26), அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் விஜய் (28), உச்சாணியைச் சோ்ந்த ரெத்தினம் மகன் பாா்த்திபன் (25), மோகன்ராஜ்(28) ஆகிய 4 பேரும் மது அருந்திக் கொண்டிருந்தனா். அருண் குமாா் திருச்சி ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களைக் கண்டித்த சிறப்பு எஸ்.ஐ சந்திரன், காவலா் காா்த்திக் ஆகிய இருவரையும் அவா்கள் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதையடுத்து, அவா்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா் வெள்ளனூா் காவல் நிலையத்தில் இதுதொடா்பாக புகாா் அளித்தனா். அதன்பேரில், அருண் குமாா், விஜய், பாா்த்திபன், மோகன்ராஜ் ஆகிய 4 பேரையும் வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...