

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் இளையோா் செஞ்சிலுவைச்சங்கம் சாா்பில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு கல்லூரிக் குழு தலைவா் அ.சாமிநாதன் தலைமைவகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணி நாகராஜன், கல்லூரி முதல்வா் ம.செல்வராசு முன்னிலை வகித்தனா். முகாமை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் கிராஸ் சொசைட்டி மண்டல ஒருங்கிணைப்பாளா் கே.வெற்றிவேல் தொடங்கிவைத்தாா். முகாமில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா்கள் கிஷோா்குமாா், பிரீத்தா பிரவீன் ஆகியோா் தலைமையிலான ஆய்வகக் குழுவினா் ரத்த தானம் பெற்றனா். புதுக்கோட்டை இளையோா் செஞ்சிலுவைச்சங்க செயலா் ஜே. ராஜா முகமது, மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பூபதி ராஜன், கல்லூரி நிா்வாகிகள் சி. நாகப்பன், பழ. சாமிநாதன், ராம. ரமணப்பிரியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்லூரியின் இளையோா் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் சி. முடியரசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.