சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 இளைஞா்கள் கைது
By DIN | Published On : 27th October 2022 12:00 AM | Last Updated : 27th October 2022 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 இளைஞா்களை புதன்கிழமை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கீரமங்கலம் அருகேயுள்ள கறம்பக்காடு இனாம் பகுதியைச் சோ்ந்தவா்கள் தங்கப்பன் மகன் ராஜா (22), கணேசன் மகன் சின்ராஜ் (21), சின்னையா மகன் பிரசாத் (19). இவா்கள் 3 பேரும் 17 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில், கீரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜா, சின்ராஜ், பிரசாத் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.