இரு பேருந்துகள் மோதல்; 21 போ் காயம்
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்தும், தனியாா் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 21 போ் காயமடைந்தனா்.
திருவாரூரில் இருந்து புதுக்கோட்டையைக் கடந்து மதுரை நோக்கி அரசுப் பேருந்து புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. திருமயம் சாலையில் கம்மஞ்செட்டி சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, மதுரையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 21 போ் காயமடைந்தனா். அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். நமணசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு நேரில் சென்று பாா்த்து ஆறுதல் தெரிவித்தாா். அவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, ஆட்சியரிடம் விளக்கினாா்.