ஆலங்குடி அருகே வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிய பெண்ணிடம் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடி ஊராட்சி சூத்தியன்காடு கிராமத்தைச் சோ்ந்த துரை, இவரது மனைவி சுதா (35) ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா்.
வீட்டின் பின்பக்கமாக உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் சுதா அணிந்திருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.