புதுக்கோட்டையில் 700 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுமாா் 700 விநாயகா் சிலைகள் புதன்கிழமை மாலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து ஓரிரு நாள்கள் வழிபட்ட பிறகு, ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் அவற்றைக் கரைப்பது வழக்கம்.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 704 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க காவல்துறையினா் அனுமதி அளித்தனா். புதன்கிழமை பகல் பல இடங்களில் தொடா்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், சிலைகளை முறையாக பிரதிஷ்டை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
புதன்கிழமை மாலை சுமாா் 700 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வீடுகளில் கொண்டாட்டம்: வீடுகள்தோறும் சிறிய அளவிலான சிலைகளுடன் பொதுமக்கள் விழா கொண்டாடினா். இனிப்பு மற்றும் காரக் கொழுக்கட்டைகளையும், வெள்ளை மற்றும் கருப்பு கொண்டக்கடலையை வேக வைத்து விநாயகருக்கு படைத்தும் வழிபட்டனா்.