ஆவத்தாயி அம்மன் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம் , கறம்பக்குடி வட்டம், பல்லவராயன்பத்தை கிராமத்தில் ஆவத்தாயி அம்மன், பட்டவன் சுவாமிகள் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.
தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அதிமுக (ஓபிஎஸ் பிரிவு) வடக்கு மாவட்டச் செயலா் ராஜே. ராஜசேகரன், ஸ்ரீ பிரஹதம்பாள் ஆலய நவராத்திரி அறக்கட்டளைப் பொருளாளா் சத்தியராம் ராமுக்கண்ணு, அதிமுக பாசறை மாவட்டச் செயலா் கருப்பையா, பாப்பாநாடு நகரத்தாா் சங்கத் தலைவா் வைரவன், பல்லவராயன் பத்தை புதுப்பட்டி ஊராட்சித் தலைவா் இந்திரா ராமையன், கறம்பக்குடி ஒன்றியக் குழு உறுப்பினா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.