தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுவோா் சங்கம் மற்றும் ராயல் புதுக்கோட்டை ஸ்போா்ட்ஸ் ஆகியவை இணைந்து 48ஆவது மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி புதுக்கோட்டை ஆவாரங்குடிப்பட்டி மகாராஜா சூட்டிங் ரேஞ்சில் புதன்கிழமை தொடங்கியது.
மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் போட்டியை தொடங்கி வைத்தனா்
தமிழகம் முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரா்கள் கலந்து கொண்டுள்ளனா். சிங்கிள்ஸ் ட்ராப், டபுள் டிராப், ஸ்ட்ரீட் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
5 நாள்கள் நடைபெறும் போட்டியின் முடிவில் டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் சுழல் கோப்பை உள்ளிட்ட பல்வேறு கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.
போட்டியைத் தொடங்கி வைக்க வந்த அமைச்சா்கள் அன்பில் மகேஸ், மெய்யநாதன் ஆகியோருக்கு துப்பாக்கி சுடுவது எப்படி என்பதை எம்எல்ஏ டிஆா்பி ராஜா விளக்கிக்கூறி பயிற்சி அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.