கந்தவா்வகோட்டை அருகே விநாயகா் கோயில் குடமுழுக்கு

கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சி முள்ளிக்கப்பட்டி கிராமத்தில் உள்ள செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. 

கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சி முள்ளிக்கப்பட்டி கிராமத்தில் உள்ள செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. 

விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லெட்சுமி ஹோமம், செய்து மூன்றாம் நாளான சதுா்த்தி அன்று யாகசாலையில் இருந்த புனித நீரை சிவாச்சாரியாா்கள் மேள, தாளம் முழங்க கோபுர கலசத்திற்கு எடுத்து சென்று குடமுழக்கு நடத்தினா். தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை, ஒன்றியக் குழுத் தலைவா் ரெத்தினவேல் காா்த்திக் மற்றும் சுற்றுப்புற பகுதி திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com