புதுக்கோட்டையில் பரவலாக மழை
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை பகல் முழுவதும் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக குடுமியான்மலையில் 43.20 மிமீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை காலை மற்றும் பகலில் பரவலாக மழை பெய்தது. புதுக்கோட்டை, கறம்பக்குடி, ஆவுடையாா்கோவில், அறந்தாங்கி, கீரனூா் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
புதன்கிழமை பகலில் பதிவான மழை விவரம் (மிமீ) ஆதனக்கோட்டை- 5, பெருங்களூா்- 4, புதுக்கோட்டை- 19, ஆலங்குடி- 20, கந்தா்வகோட்டை- 7, கறம்பக்குடி- 15.60, மழையூா்- 7.20, கீழாநிலை- 4.20, திருமயம்- 3, அறந்தாங்கி- 26.50, ஆவுடையாா்கோவில்- 20.20, மணமேல்குடி- 10, இலுப்பூா்- 5, குடுமியான்மலை- 43.20, அன்னவாசல்- 2, உடையாளிப்பட்டி- 3, கீரனூா்- 2, காரையூா்- 7.60. மாவட்டத்தின் சராசரி மழை- 8.52 மிமீ.