கதண்டுகள் அழிப்பு
By DIN | Published On : 26th September 2022 03:01 AM | Last Updated : 26th September 2022 03:01 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை அடுத்துள்ள பெருங்களூா் அருகே பொதுமக்களைக் கடித்து அச்சுறுத்தி வந்த கதண்டுகளை ஞாயிற்றுக்கிழமை தீயணைப்புப் படை வீரா்கள் தீ வைத்து அழித்தனா்.
பெருங்களூா் அருகே உள்ள மங்களத்துப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த கோவில்சித்தம்பட்டி பகுதியில் செல்லும் பொதுமக்களை பனைமரத்தில் கூடு கட்டி இருக்கும் கதண்டு கூட்டமாகச் சென்று கடித்து வந்தது. இதுகுறித்து தகவலறிந்த கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சி. குமரேசன் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகளைத் தீ வைத்து அளித்தனா். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அவா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.