ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் மற்றும் மாடு பிடி வீரா்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்ற முறையை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டை ஆட்சியரகம் அருகே தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞரணி பேரவையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பேரவையின் நிறுவனா் ஆரியூா் சி. சிவா தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் பாலையா, மாநிலச் செயலா் ஸ்டீபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தின் முடிவில் ஆட்சியரகத்தில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றும் அளிக்கப்பட்டது.