

உலகத் தாய்ப்பால் வார விழாவையொட்டி புதுக்கோட்டையில் உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்கள் இந்த உறுதிமொழியை ஏற்றனா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து பேரணி தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலா் க.ந. கோகுலப்பிரியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.