திருமாவளவன் பிறந்த நாள் விழா

திருமாவளவன் பிறந்த நாள் விழா

பொன்னமராவதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் அதன் தலைவா் தொல்.திருமாவளவனின் 61-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

பொன்னமராவதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் அதன் தலைவா் தொல்.திருமாவளவனின் 61-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற விழாவுக்கு, நகரச்செயலா் மலை.தேவேந்திரன் தலைமைவகித்தாா். விழாவின் தொடக்கமாக அண்ணல் அம்பேத்காா் திருவுருவப் படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில், மாவட்டச்செயலா் வழக்கறிஞா் கரு.வெள்ளைநெஞ்சன் பங்கேற்று கட்சிக்கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். மாணவா் சுகநிலவன் திருமாவளனின் எழுச்சிப் பயணங்கள் குறித்து விளக்கிப்பேசினாா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடக்குறிப்பேடுகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. தொகுதிச்செயலா் வை.சுடா்வளவன், துணைத்செயலா் ரமேஷ், மாவட்ட துணைச்செயலா்கள் இரா.திருமறவன், சின்னு பழகு, மாநில துணைச்செயலா் கலைமுரசு, முன்னாள் மாவட்டச்செயலா் சசிகலைவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரதுணைச்செயலா் இரா.ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com