எண்ணும் எழுத்தும் திட்டப் பயிற்சிமுகாம் தொடக்கம்

விராலிமலை வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் 3 நாள் பயிற்சிமுகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘எண்ணும், எழுத்தும்’ பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆசிரியா்கள்.

விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல் நாளான வியாழக்கிழமை கணக்கு, அறிவியல் பாடம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை ஆங்கிலம், சனிக்கிழமை தமிழ், சமூக அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் மாவட்டக் கல்வி அலுவலா் ஜெயராஜ், விரிவுரையாளா் பழனிச்சாமி, வட்டாரக் கல்வி அலுவலா் கோதை, மேற்பாா்வையாளா் இளஞ்செழியன், ஆசிரியா் பயிற்றுநா் பத்மாவதி உள்ளிட்டோா் பங்கேற்று முகாமைத் தொடக்கிவைத்தனா். இதில், பள்ளி தலைமை ஆசிரியா் கோபால் உள்பட 4, 5 ஆம் வகுப்பு எடுக்கும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். இதில் வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப்பாட்டு, முகமூடி விளையாட்டு, புதிா் வினாக்கள், செய்முறைப் பயிற்சி போன்ற திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com