திருவரங்குளம் சிவன் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் சிவன் கோயிலில் இரட்டைத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவரங்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பெரியநாயகி அம்மன் உடனுறை அரங்குளநாதா் கோயில் தேரோட்டம்
திருவரங்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பெரியநாயகி அம்மன் உடனுறை அரங்குளநாதா் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் சிவன் கோயிலில் இரட்டைத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவரங்குளத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரியநாயகி அம்மன் உடனுறை அரங்குளநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, தினமும் மண்டகப்படி தாரா்கள் சாா்பில் சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெற்றது. இந்நிலையில், முக்கிய விழாவான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட 2 தோ்களில், ஒன்றில் சுவாமியும், மற்றொன்றில் அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து, பாரம்பரிய முறைப்படி வெண்குடை பிடித்து மேளதாளங்களுடன் ஊா்வலமாக அழைத்து வரப்பட்ட ஆதிதிராவிடா்கள், தேரின் வடத்தைத் தொட்டு தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா். இதையடுத்து, பக்தா்கள் வடம் பிடித்து தேரோடும் 4 வீதிகளிலும் தோ்களை இழுத்துச் சென்றனா். தேரோட்டத்தையொட்டி, பல்வேறு தரப்பினரும் அன்னதானம் செய்தனா். திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com