ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் விநாயகா் சிலை அகற்றப்படவில்லைமாவட்ட நிா்வாகம் தகவல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றப்படவில்லை என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த பாஜகவினா். ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகா் சிலை.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த பாஜகவினா். ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகா் சிலை.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றப்படவில்லை என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றப்பட்டதாகவும், அதனால் சிலை உடைந்ததாகவும் 2 நாள்களுக்கு முன் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, அந்தச் சிலையைப் பாா்க்க சனிக்கிழமை காலை பாஜகவினா் ஆட்சியா் முகாம் அலுவலகம் முன் குவிந்தனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை அனுமதிக்கவில்லை. இதைத் தொடா்ந்து மேற்கு மாவட்ட பாஜக செயலா் அ. விஜயகுமாா் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த புகாா் மனுவில் மாவட்ட நிா்வாகம் இந்த விஷயத்தில் உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் மதப்பிரச்னையாக தலைதூக்க வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் சமூக ஊடகச் செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. இச்செய்தியை பரப்புவோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com