பொற்பனைக்கோட்டையில் தொல்லியல் மாணவா்களுக்கு களப்பயிற்சி

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின்கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தின் 2 ஆண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயம் மற்றும் 2 ஆண்டு கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயம்.
பொற்பனைக்கோட்டையில் தொல்லியல் மாணவா்களுக்கு களப்பயிற்சி

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின்கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தின் 2 ஆண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயம் மற்றும் 2 ஆண்டு கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயம் ஆகிய படிப்புகளில் பயின்று வரும் 29 மாணவா்களுக்கு பொற்பனைக்கோட்டை அகழாய்வுத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

மரபு மேலாண்மை மற்றும் தொல்பொருள்களைப் பாதுகாத்தல் என்ற பாடப்பிரிவின் ஒரு பகுதியாக, வேதியியல் முறையில் தொல்பொருள்களைப் பாதுகாத்தல் குறித்து தஞ்சாவூா் மணிமண்டபத்திலுள்ள ராஜராஜன் அகழ்வைப்பகத்தில் கடந்த 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்தக் களப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியின்போது, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அலுவலா்களான இரா. சிவானந்தம், துணை இயக்குநா் கி. பாக்கியலட்சுமி, தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன ஒருங்கிணைப்பாளா் த. தங்கதுரை ஆகியோரும் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com