புதுக்கோட்டை மாவட்டம், ரெத்தினக்கோட்டை அக்னிபஜாா் பள்ளிவாசல் பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும் என இந்திய மாதா் தேசிய சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
ரெத்தினக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற இந்தச் சம்மேளனத்தின் கிளை அமைப்புக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே பகுதியில் தெருவிளக்குகளை பழுதுநீக்கி எரிய வைக்க வேண்டும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, எஸ். பொம்மி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஆா் தனலட்சுமி, நகரச் செயலா் கே. கோமதி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினா். கிளைத் தலைவராக பொம்மி, செயலராக பரகத்நிஷா, பொருளாளராக மெகா்நிஷா, துணைத் தலைவராக ரகமத்நிஷா, துணைச் செயலராக நாகூா் அம்மாள் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.