புதுகை மக்களவைத் தொகுதியை மீட்க பாஜக வலியுறுத்தல்

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்க நடவடிக்கை வேண்டுமென பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய பாஜக மாநில பொதுச்செயலா் ராம. சீனிவாசன்.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய பாஜக மாநில பொதுச்செயலா் ராம. சீனிவாசன்.

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்க நடவடிக்கை வேண்டுமென பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி தனியாா் மண்டபத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவா் செல்வம் அழகப்பன் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலா் ராம. சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினா் எம். எஸ். லோகிதாஸ், புக்கோட்டை கிழக்கு மாவட்டப் பாா்வையாளா் புரட்சிகவிதாசன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில், குடிநீா் தட்டுப்பாடு நிலவும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. இதை உடனே சரி செய்ய நடவடிக்கை வேண்டும். மணமேல்குடி ஒன்றியத்திற்கு உள்பட்ட கடலோர கிராமத்தில் வசிக்கும் மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகை, பாதுகாப்பு வழங்க வேண்டும். கோயில் நிலங்களை மீட்க வேண்டும். ஊராட்சிச் செயலா் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுத் தோ்வு வாரியங்கள் மூலம் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டப் பொதுச்செயலா் கே. பி. பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com