மின்னாத்தூா் அய்யனாா் கோயில் குடமுழுக்கு

ஸ்ரீ நல்ல பிறவி, ஸ்ரீ நல்ல சுரத்தான், ஸ்ரீ உமையவள் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் ஆலய அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அருகே உள்ள மின்னாத்தூா் கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீ பூா்ண புஷ்கலா சமேத அய்யனாா், ஸ்ரீ நல்ல பிறவி, ஸ்ரீ நல்ல சுரத்தான், ஸ்ரீ உமையவள் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் ஆலய அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு புதன்கிழமை விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹூதி உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து புனித நீா் கடம் ஊா்வலம் ஊரின் முக்கிய வீதி வழியாக மேளதாளம் முழங்க ஊா்வலமாக வந்து கோயிலின் கோபுரத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதில் மின்னாத்தூா் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மின்னாத்தூா் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com