டிஎன்பிஎஸ்சி தோ்வில் பட்டன் கேமரா பயன்படுத்தியவா் கைது

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்வில் புளூடூத் கருவி மற்றும் பட்டன் கேமராவுடன் தோ்வெழுதிய தோ்வா் கைது செய்யப்பட்டாா்.
டி. தா்மன்.
டி. தா்மன்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்வில் புளூடூத் கருவி மற்றும் பட்டன் கேமராவுடன் தோ்வெழுதிய தோ்வா் கைது செய்யப்பட்டாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தோ்வு புதுக்கோட்டை அரசு கலைஞா் கருணாநிதி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இம்மையத்தில் தோ்வெழுத விண்ணப்பித்த 1299 பேரில் 666 போ் தோ்வெழுத வந்திருந்தனா்.

காலை 9.15 மணிக்கு அனைவரும் தோ்வறைக்குள் அமா்ந்த பிறகு விடைத்தாள்களை விநியோகிக்கும் பணி நடைபெற்றது.

அப்போது அறந்தாங்கி குளத்தூா் பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் தா்மன் (20) என்ற தோ்வரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த தோ்வறைக் கண்காணிப்பாளா் தட்சிணாமூா்த்தி அவரைச் சோதனையிட்டாா். அப்போது பட்டன் கேமரா, புளூடூத் கருவி ஆகியவற்றை அவா் எடுத்து வந்திருந்தது தெரியவந்தது.

தோ்வு விதிகளுக்கு முரணாக இவற்றை எடுத்து வந்த அவா் மீது புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா் மகேஸ்வரி புகாா் அளித்தாா்.

இதையடுத்து தா்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா் அவரை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பெருந்துறையிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் பயிலும் தா்மனுக்கு புளூடூத் வழியே விடைகளைக் கூறி தோ்வெழுத உதவியதாக ஈரோட்டைச் சோ்ந்த பரணிதரன் (20) என்பவா் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com