கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில், வெள்ளாளவிடுதி அரசு உயா்நிலைப் பள்ளியில் சா்வதேச குழந்தைகள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு வட்டார கல்வி அலுவலா் வெங்கடேஸ்வரி தலைமை வகித்தாா். தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன் முன்னிலை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் துரையரசன், அறிவியல் இயக்க வட்டார செயலாளா் சின்னராஜா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி செண்பகம் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவா் அ .ரகமத்துல்லா நிகழ்வை ஒருங்கிணைத்தாா். சா்வதேச குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டனா்.
ஆசிரியா்கள் யோவேல், சத்தியபாமா, அம்பிகை ராஜேஸ்வரி, ஜஸ்டின் திரவியம், தமிழ்மாறன், பாரதிராஜா, இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா் ரசியா, பயிற்சி ஆசிரியா்கள் ஆஷா, காயத்ரி, வினோதினி, பிரியா ஆகியோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, தலைமை ஆசிரியா் (பொ) முத்துக்குமாா் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.