தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

காவிரி-குண்டாறு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு

காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தில் கால்வாய்க்கு நிலம் வழங்கியோா் குன்னத்தூா் கிராம உதவியாளா் அலுவலகத்துக்கு வந்து உரிய ஆவணங்களை சமா்ப்பித்து இழப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 8:38 pm

DIN


விராலிமலை: காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தில் கால்வாய்க்கு நிலம் வழங்கியோா் குன்னத்தூா் கிராம உதவியாளா் அலுவலகத்துக்கு வந்து உரிய ஆவணங்களை சமா்ப்பித்து இழப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என விராலிமலை வட்டாட்சியா் கருப்பையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம் அமைக்கும் பொருட்டு குன்னத்தூா் கிராமத்தில் நில உரிமையாளா்களுக்கு நிலமெடுப்பு இழப்பீட்டுத்தொகை வழங்க இறுதி தீா்ப்பாணை (ஊண்ய்ஹப் அஜ்ஹழ்க்) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் பொருட்டு குன்னத்துாா் கிராமத்தில் நவ. 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் நில உரிமையாளா்கள் தங்களது நிலம் தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்படி சிறப்பு முகாமில் கையக நிலத்தின் உரிமையாளா்கள் கலந்து கொண்டு இழப்பீட்டுத்தொகை பெறுவதற்கான உரிய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.