

கந்தா்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் பேத்தி இறந்த துக்கம் தாளாத தாத்தாவும் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை, கோவிலூா் கீழத் தெருவை சோ்ந்த அடைக்கலம் மகள் ஹா்ஷினி (14). இவா், கந்தா்வகோட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை மாணவி அதிக நேரம் தூங்கிக் கொண்டிருந்ததை அவரது அண்ணன் கண்டித்ததால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
புகாரின் பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
உடற்கூறாய்வுக்கு பிறகு மாணவியின் உடல் ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலை ஊா்வலமாக கந்தா்வகோட்டை இடுகாட்டிற்கு கொண்டு சென்றனா். அப்போது, மாணவியின் தாத்தா சுப்பிரமணியன் (75), கதறி அழுது கொண்டே சுடுகாட்டிற்கு சென்றுள்ளாா். இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது சுப்பிரமணியன் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். ஒரே நாளில் பேத்தியும், தாத்தாவும் இறந்தது இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.