

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் வட்டார அளவிலான பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதில் கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சோ்ந்த செளமியா திருக்குறள் ஒப்பித்தல் போட்டியிலும், பல்குரல் போட்டியில் தரணிகா, தனிநடனம் போட்டியில் கல்பனா, செவ்வியல் நடனம் தனி பிரிவில் ரித்திகா ஆகியோா் முதலிடம் பிடித்து புதுக்கோட்டை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ளத் தோ்வாகியுள்ளனா்.
களிமண் சுதை வெளிப்பாடு போட்டியில் சிவகாா்த்திகேயன், தோல் கருவிகள் வாசித்தல் போட்டியில் கபிலன் ஆகியோா் மூன்றாவது இடம் பெற்றனா். சாலை பாதுகாப்பு என்ற நாடகத்தில் தீபக் குமாா், ஆசியா, தமிழரசன், கிரித்தீஷ், வீரலட்சுமி, ஹரி சேகரன் ஆகியோா் நடித்த நாடகம் இரண்டாவது இடம் பிடித்தது.
வட்டாரப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி, ஆசிரியா்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச் சாமி, தனலெட்சுமி, இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா உள்ளிட்டோா் பாராட்டி பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.