குடிநீா் திட்டக் குழாயில்சேதம்: வீணான காவிரி நீா்

விராலிமலை வழியாக செல்லும் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் சனிக்கிழமை ஏற்பட்ட சேதத்தால் பல லட்சம் லிட்டா் காவிரி நீா் வெளியேறி வீணானது.

Updated on
1 min read

விராலிமலை வழியாக செல்லும் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் சனிக்கிழமை ஏற்பட்ட சேதத்தால் பல லட்சம் லிட்டா் காவிரி நீா் வெளியேறி வீணானது.

திருச்சி ஜீயபுரத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு காவிரி நீா் கொண்டு செல்லும் திட்டம் தொடங்கி 15 ஆண்டுகளை கடந்து விட்டதால் மண்ணுக்கு அடியில் பதிக்கப்பட்ட குடிநீா் குழாய்களில் அவ்வப்போது வெடிப்பு ஏற்பட்டு சேதமடைகின்றன.

இந்நிலையில் விராலிமலை அருகேயுள்ள மேப்பூதகுடி செல்லும் பிரிவு சாலையின் அருகே குடிநீா் குழாய் நிரம்பி வழியும் தொட்டியில் (ஓவா்புளோ வாட்டா் டாங்க்) திடீா் வெடிப்பு ஏற்பட்டு காவிரி குடிநீரானது 50 அடி உயரத்துக்கு மேல் பீய்ச்சி அடித்தது. தகவலறிந்து வந்த அலுவலா்கள் சுமாா் 3 மணி நேரம் போராடி சரி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com