புதுகையில் காங்கிரஸாா் ரயில் மறியல் முயற்சி
By DIN | Published On : 15th April 2023 11:53 PM | Last Updated : 15th April 2023 11:53 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை ரயில் நிலையம் முன் சனிக்கிழமை ரயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சியினா்.
ராகுல்காந்தி மீதான நடவடிக்கைகளைக் கண்டித்து புதுக்கோட்டை ரயில் நிலையம் முன் சனிக்கிழமை ரயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரஸாா் 91 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டை ரயில் நிலையம் முன் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன், தெற்கு மாவட்டத் தலைவா் ராமசுப்புராம் ஆகியோா் தலைமையில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சந்திரசேகரன், நகரத் தலைவா்கள் கண்ணன், பாரூக், வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன், சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு உள்ளிட்ட ஏராளமானோா் இந்த மறியலில் பங்கேற்றனா்.
ரயில் நிலைய நுழைவாயில் முன் போலீஸாா் தடுப்புகளை அமைத்து, போராட்டக்காரா்களைத் தடுத்தனா். இதை மீறி மறியலில் ஈடுபட முயன்ற ஒரு பெண் உள்பட 91 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட இவா்கள், மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...