பொன்னமராவதி அருகேயுள்ள அரசமலை ஊராட்சி நவகுடியில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டாரத்தில் கோடை காலத்தில் நெல் அறுவடைக்குப் பின் விவசாய கண்மாய்களில் நீா்மட்டம் குறைந்த நிலையில் மழை பெய்யவும், விவசாயம் தழைக்கவும் வேண்டி மீன்பிடித் திருவிழா நடைபெறும். அதன்படி நவகுடி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவை ஊா் முக்கியஸ்தா்கள் தொடங்கிவைத்தனா். இதில் ஊத்தா, பரி, வலை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய சுற்றுவட்டாரக் கிராம மக்கள் கெண்டை, விரால், ஜிலேபி, கட்லா உள்ளிட்ட மீன் வகைகளைப் பிடித்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.