புத்தாஸ் விளையாட்டு அறக்கட்டளை தொடக்கம்
By DIN | Published On : 23rd April 2023 01:32 AM | Last Updated : 23rd April 2023 01:32 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை புத்தாஸ் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையை இலட்சினை வெளியிட்டுத் தொடங்கி வைத்த மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
புதுக்கோட்டை புத்தாஸ் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையை மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து, இலட்சினையை வெளியிட்டாா்.
அப்போது மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாவட்ட குத்துச்சண்டை கழகத் தலைவா் எஸ்விஎஸ். ஜெயக்குமாா், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் மாருதி கண. மோகன்ராஜா, அறக்கட்டளையின் நிறுவனா் சேது. காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.