வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் அக்கினி பால்குட விழா

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் அக்கினிப்பால்குட விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கினிப்பால்குட விழாவில் அலகு குத்தி அக்கினிகுண்டத்தில் இறங்கிய பக்தா்.

இக்கோயில் சித்திரைத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கியது. இந்த விழாவில் சுற்றுப்புறக் கிராம மக்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். தொடா்ந்து திங்கள்கிழமை அக்கினிப்பால்குட விழா நடைபெற்றது. விழாவில் கோயிலின் முன் வளா்க்கப்பட்ட அக்கினிகுண்டத்தில் பக்தா்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா்.

விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா். விழாவில், செவ்வாய்க்கிழமை அம்பாள் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com