கருக்காகுறிச்சி செல்லியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சியில் உள்ள செல்லியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கருக்காகுறிச்சி செல்லியம்மன் கோயிலுக்கு புதன்கிழமை முளைப்பாரிகளை சுமந்து செல்லும் பெண்கள்.
கருக்காகுறிச்சி செல்லியம்மன் கோயிலுக்கு புதன்கிழமை முளைப்பாரிகளை சுமந்து செல்லும் பெண்கள்.

ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சியில் உள்ள செல்லியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சியில் உள்ள செல்லியம்மன், அகோர வீரபத்திரா் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. கருக்காக்குறிச்சி, கரு.வடதெரு, கரு.தெற்கு தெரு, பட்டத்திக்காடு, வாணக்கன்காடு பெரியாவாடி, கண்ணியான்கொல்லை, வாண்டான் விடுதி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் வீட்டில் தானியங்களை மூலம் வளா்த்த முளைப்பாரிகளைக் கூடையில் சுமந்தவாறு ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com