மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சித்திரை திருவிழா பூச்சொரிதல் விழா புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சித்திரை திருவிழா பூச்சொரிதல் விழா புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை ஜல்லிக்கட்டுப் போட்டியுடன் தொடங்கியது. தொடா்ந்து, இரவு தொடங்கிய பூச்சொரிதல் விழாவில் பல்வேறு அமைப்பினா் சாா்பில் 10-க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட மின்னொளி பூ பல்லக்கில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பூக்கூடை ஏந்தி வந்து அம்மனுக்கு சாத்தி வழிபாடு நடத்திச்சென்றனா். கன்னிப்பெண்கள் பூக்கூடை ஏந்திவந்து அம்மனை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். விடிய விடிய நடைபெற்ற விழாவில் இன்னிசைக் கச்சேரி, தொலைக்காட்சி நடிகா்களின் சிரிப்பு நிகழ்ச்சி, தெம்மாங்கு பாட்டுக் கச்சேரி, நாட்டுப்புறப் பாடல்கள் என்று களைகட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com