புதூக்கோட்டை நகராட்சிப் பகுதியில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத 7 வணிக நிறுவனங்களுக்கு அலுவலா்கள் புதன்கிழமை சீல் வைத்தனா்.
புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் பல்வேறு இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வாடகை நிா்ணயம் செய்து வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில கடைகளுக்கு கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நகராட்சி ஆணையா் (பொ) வீரமுத்துக்குமாா் உத்தரவின்பேரில், வருவாய் அலுவலா் (பொ) பாசித் தலைமையில் புதன்கிழமை ரொட்டிக்காரத் தெருவில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான 3 கடைகள், சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள 4 கடைகள் என ஏழு கடைகளைப் பூட்டி சீல் வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.