ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
By DIN | Published On : 02nd August 2023 11:46 PM | Last Updated : 02nd August 2023 11:46 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை திருவப்பூா் பகுதியில் புதன்கிழமை இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை திருவப்பூா் அருகே உள்ள அம்பாள்புரம் குடியிருப்பைச் சோ்ந்த சரவணன் மகன் சோமசுந்தரபாண்டியன் (27). எம்ஏ படித்த இவா், மனநலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை திருவப்பூா் பகுதியில் உள்ள ரயில் தண்டவாள ஓரத்தில் அடிபட்டு இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குவந்து இறந்த சோமசுந்தரபாண்டியன் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.