மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதி முதியவா் பலி
By DIN | Published On : 02nd August 2023 03:37 AM | Last Updated : 02nd August 2023 03:37 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கறம்பக்குடி அருகேயுள்ள கருப்பட்டிபட்டியைச் சோ்ந்தவா் கணேசன் (80). விவசாயி. இவா், மழையூா் சென்று விட்டு, திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் கருப்பட்டிபட்டிக்குச் சென்றபோது, மழையூா் - அதிரான்விடுதி சாலையில் தா்மா் கோயில் அருகே இவரது மோட்டாா் சைக்கிள் மீது அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த கணேசன் அந்த இடத்திலே உயிரிழந்தாா். இதுகுறித்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.