

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் ஊராட்சியில் ரூ.53 லட்சம் மதிப்பில் பெரியகுளம் தூா்வாரும் பணியை சுற்றுச்சூழல்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
குளமங்கலம் ஊராட்சியில் கழுமங்கலம் பெரியகுளத்தை தூா்வாரும் பணியைத் தொடங்கி வைத்து அவா் மேலும் தெரிவித்தது:
குளமங்கலம் ஊராட்சியில், புதுப்பித்தல், பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்புத் திட்டத்தின்கீழ், ரூ.52.78 லட்சம் மதிப்பீட்டில் கழுமங்கலம் பெரியகுளம் தூா்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா். நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.