சோழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 09th August 2023 01:33 AM | Last Updated : 09th August 2023 01:33 AM | அ+அ அ- |

பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் பைரவா்.
பொன்னமராவதி: பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி காலபபைரவருக்கு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக ஹரி சிவாச்சாரியாா் தலைமையில் சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலபைரவருக்கு பால், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டுக்குழு நிா்வாகிகள் ராம.சேதுபதி, பி.பாஸ்கா், வெள்ளைச்சாமி, ராணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
இதேபோல், பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.