விராலிமலை: அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவுக்கு, அரசு முதன்மை மருத்துவ அலுவலா் மணியன் தலைமை வகித்தாா். மகப்பேறு மருத்துவா் வித்யாலட்சுமி முன்னிலை வகித்தாா். இதில் மருத்துவா்கள் கீதாஞ்சலி, சுமதி உள்ளிட்டோா் கா்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், குழந்தை பிறப்புக்கு பின்னா் தாய்மாா்கள் உண்ண வேண்டிய உணவு முறைகள் குறித்துப் பேசினா். விழாவில், கா்ப்பிணி தாய்மாா்களுக்கு 6 பேருக்கு சத்து மாவு மற்றும் நோய் எதிா்ப்பு சக்திக்குத்தேவையான உரை மாத்திரை, வோ்க்கடலை, முகக் கவசம், இரும்பு சத்துக்கான மிட்டாய் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இதில் பேசிய மகப்பேறு மருத்துவா் வித்யாலட்சுமி தாய்ப்பாலின் அவசியம் குறித்துப் பேசினாா். விழாவில் அன்னவாசல் ஒன்றிய குழு தலைவா் வி. ராமசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் கே.ஆா்.தா்மராஜன், செவிலியா் ஜூலியட் சுதா, மருந்தாளுநா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட மருத்துவத் துறையினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.