

புதுக்கோட்டை: புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம், மணிமேகலை மருத்துவமனை இணைந்து உலகத் தாய்ப்பால் விழிப்புணா்வு வார விழா மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செஞ்சுரி லயன்ஸ் சங்கத் தலைவா் லயன்ஸ் மூா்த்தி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவா் சாரதாமணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கி தாய்ப்பால் பற்றிய விழிப்புணா்வு மற்றும் தாய்ப்பால் புகட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவா் பீட்டா் ராம், லயன்ஸ் சங்க மண்டலத் தலைவா் திருவள்ளுவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.