கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, எண்ணை காப்பு செய்து திரவியப் பொடி, மஞ்சள் பொடி, பால், தயிா், அரிசி மாவு, தேன், பன்னீா் போன்ற அபிஷேக பொருள்களால் அபிஷேகம் செய்து ஜவ்வாது பூசி சிகப்பு நிற புது வாஸ்திரம் உடுத்தி அரளி மலா்களை கொண்டு அலங்காரம் செய்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.